எங்களைப் பற்றி

அகில இந்திய முழு இரவு ஜெப ஐக்கியம்

1970-ம் ஆண்டுகளில் சகோ. ஆபிரகாம் ராஜபாண்டியன் மற்றும் பல தேவ ஊழியர்கள் முக்கியமாக டாக்டர். ஜீவானந்தம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், பே. தேவதாசன் இணைந்து தேசத்தின் எழுப்புதலுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என கர்த்தருடைய பாதத்தில் பல நாட்கள் காத்திருந்தார்கள்.

அவர் (இயேசுகிறிஸ்து) ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் (லூக். 6:12) என்ற வேதவசனத்தின் அடிப்படையில் கர்த்தர் இந்த ஊழியர்களோடு பேசினார். பின்னர் இவர்கள் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்த போது தேசத்தின் எழுப்புதலுக்காக முழு இரவும் ஜெபிக்கும்படி கர்த்தர் பாரத்தைக் கொடுத்தார்.

இந்த பாரத்தின் அடிப்படையில் 1972-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் வைத்து முழு இரவு ஜெபம் ஆரம்பிக்கப்பட்டது. இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விசுவாசிகள் ஜெபத்தில் கலந்து கொண்டு தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தார்கள்.

இடம் போதாததினால் சென்னை வி.பி. ஹாலுக்கு மாற்றப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி இரவு நடைபெற்றது. 5 ஆயிரத்துக்கும் அதிகமான விசுவாசிகள் பங்கு பெற்று தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தார்கள், அல்லேலூயா.

சென்னையை பற்றிப் பிடித்த ஜெப அக்கினி, பெங்களுரு, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் மும்பை பட்டணங்களில் பிடித்தது. சில மாதங்களில் இந்தியாவின் பல பட்டணங்களில் போதகர்கள், சுவிசேஷகர்கள் இணைந்து எழுப்புதலுக்காக முழு இரவு ஜெபங்கள் நடத்த தொடங்கினார்கள்.

தமிழக அரசின் விதிகளின்படி, முழு இரவு ஜெப ஊழியம், “அகில இந்திய முழு இரவு ஜெப ஐக்கியம்” என்னும் பெயரில் தமிழ்நாடு சங்கங்களின் சட்டப்படி சென்னை சகோ. சைமன் ஸ்டான்லி அவர்கள் தலைவராகவும், சகோ. ஆபிரகாம் ராஜபாண்டியன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திருமதி. அன்னத்தாய் ராஜபாண்டியன் அவர்கள் பொருளாளராகவும், சிலரை உறுப்பினர்களாகவும் ஏற்படுத்தி, 1983-ல் சொஸைட்டியாக பதிவு செய்யப்பட்டது.

தற்சமயம் இந்தியா முழுவதும் 220 முழு இரவு ஜெபதளங்கள் ஏற்படுத்தி, நமது பாரத நாட்டின் விரைவான எழுப்புதலுக்காக ஜெபித்து வருகிறோம்.

ஜெபவீரர் முகாம்கள்

பின்னர் தேசத்தின் எழுப்புதலுக்காக குடியரசு தினங்களில், சுதந்திர தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதாவது ஜனவரி 25, 26 தேதிகளில், ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் கர்த்தர் காண்பிக்கும் இடங்களில் ஜெபவீரர் முகாம்கள் 1976-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகின்றோம். முதல் முகாம் கன்னியாகுமரி பட்டணத்திலும், 2வது முகாம் மதுரை பட்டணத்திலும் நடந்தது.

ஜெபவீரர் முகாம்கள் இந்தியாவின் பல பட்டணங்களில் நடத்தப்பட்டுள்ளது. புதுடில்லி, திருவனந்தபுரம், பெங்களுரு, கொச்சின், காசி, திருப்பதி, விஜயவாடா, மும்பை, கொல்கொத்தா, அந்தமான், மைசூர், கோவா, மங்களுரு, விசாகப்பட்டினம், ஹைதராபாத், நாக்பூர், கோயம்புத்தூர், சென்னை, வேலூர், சேலம், திருவல்லா மற்றும் நெல்லூர் போன்ற பட்டணங்களில் நடைபெற்றது.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் முழு இரவு ஜெப அக்கினியானது இந்தியாவின் பல பட்டணங்களில் பற்றிப் பிடித்தது. பல திருச்சபைகளில் முழு இரவு ஜெபங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏன், சில வீடுகளிலும் முழு இரவு ஜெபங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

அகில இந்திய முழு இரவு ஜெப ஐக்கியத்தின் மூலம் தேசத்தில் இன்னும் ஜெப அக்கினி ஊற்றப்பட, விசுவாசிகளை ஊக்கப்படுத்த ஒவ்வொரு மாதமும் ஜெப தூபம் என்ற மாத இதழ் பிரசுரிக்கப்பட்டது. பின் இது முழு இரவு ஜெபவீரர் என பெயர் மாற்றப்பட்டு இன்று வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

விரைவில் இந்திய தேசம் கிறிஸ்துவை அறிய வேண்டும் என அரசு விடுமுறைத் தினங்களில் ஒருநாள் ஜெப முகாம் இந்தியாவின் பல பட்டணங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. எழுப்புதலை மையமாக வைத்து, 7 மணி நேர ஜெபங்கள், மிஷனரி தரிசனக் கூடுகைகள், வாலிபர் முகாம்கள், பெண்கள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

திருச்சபைகளோடு இணைந்து தேசத்தின் எழுப்புதலுக்காக உபவாச ஜெபங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

தொலைநோக்கு மற்றும் பணிக்குறிக்கோள்

அன்பு, சேவை, ஆராதனை மற்றும் ஐக்கியத்தின் மூலம் விசுவாசமுள்ள சமூகத்தை உருவாக்குதல்.

தொலைநோக்கு

ஒரு தேசம் எழுப்புதலின் மூலம் மாற்றம் பெறுதல்

எங்கள் தொலைநோக்கு என்னவென்றால், ஜெபம், எழுப்புதல் மற்றும் சுவிசேஷத்தை அறிவிப்பதன் மூலம் தேவனுடைய வல்லமையால் இந்தியா மாற்றம் பெறுவதைக் காண்பதாகும். தனிநபர்கள், குடும்பங்கள், திருச்சபைகள் மற்றும் சமூகங்கள் விசுவாசத்தில் புதுப்பிக்கப்பட்டு, தேசம் முழுவதும் தேவனுடைய ராஜ்யத்தை முன்னேற்றுவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதைக் காண நாம் விரும்புகிறோம்.

எங்கள் பணிக்குறிக்கோள்

ஜெபித்து, பயிற்றுவித்து, இந்தியாவை சென்றடைவோம்

ஜெபத்தில் விசுவாசிகளை ஒன்றிணைத்து, திருச்சபையைப் பலப்படுத்தி, ஜெபவீரர்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் அன்பையும் நம்பிக்கையையும் சமூகங்களுக்கு கொண்டு செல்வதே எங்கள் பணிக்குறிக்கோள்.

ஜெபத்தின் மூலம் விசுவாசிகளை ஒன்றிணைத்து, திருச்சபையைப் பலப்படுத்தி, ஜெபவீரர்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் அன்பும் நம்பிக்கையும் சமூகங்களைச் சென்றடையச் செய்வதே எங்கள் பணியாகும். எழுப்புதல் கூட்டங்கள், மிஷனரி ஊழியம், ஜெப இயக்கங்கள் மற்றும் ஆன்மீக வளங்களின் மூலம், இந்தியாவில் எழுப்புதலைக் காண அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தலைமுறையை ஊக்குவிக்க விரும்புகிறோம்.

அணுகுமுறை

ஜெபம், விசுவாசம் மற்றும் செயலில் ஒன்றுபட்டவர்கள்

ஜெபத்திலிருந்தே எழுப்புதல் தொடங்குகிறது என்றும், விசுவாசமான செயல்களின் மூலம் அது வளர்கிறது என்றும் நாங்கள் நம்புகிறோம். விசுவாசிகளை ஒன்றிணைத்து, தொடர்ந்து ஜெபிக்க ஊக்குவித்து, ஊழியத்திற்காக மக்களை ஆயத்தப்படுத்தி, சுவிசேஷப் பணிகளுக்கு ஆதரவளித்து, ஆன்மீகப் புதுப்பித்தலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் அணுகுமுறையாகும். ஒன்றிணைந்து, தேவனுடைய பிரசன்னத்தைத் தேடி, இந்தியா முழுவதும் நிலையான எழுப்புதலுக்காக செயல்படுகிறோம்.

நாங்கள் செய்வது

தேவனுக்காக சேவை செய்து, இந்தியாவை சென்றடைவோம்

ஜெபம் மற்றும் பரிந்துரை ஜெபம்

விசுவாசிகளை ஜெபத்திலும் பரிந்துரை ஜெபத்திலும் ஒன்றிணைத்து, தேவனுடைய பிரசன்னத்தைத் தேடுகிறோம். இந்தியா முழுவதும் எழுப்புதல், திருச்சபைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்காக ஜெபிக்கிறோம்.

எழுப்புதல் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தல்

விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளரவும், ஆன்மீகப் புதுப்பித்தலை அனுபவிக்கவும் எழுப்புதல் கூட்டங்கள், முகாம்கள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

மிஷனரி ஊழியம்

சுவிசேஷப் பணிகளுக்கும் மிஷனரி ஊழியங்களுக்கும் ஆதரவளித்து, சமூகங்களுக்கு அன்புடனும் இரக்கத்துடனும் சேவை செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் அன்பையும் நம்பிக்கையையும் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.